Breaking news காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மறைவு: ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் விளங்கியவர் தான் தருமபுரி ஸ்ரீனிவாஸ்.
சோனியா காந்தி உட்பட உயர் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு கொண்ட இவர் ஆந்திராவின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மறைவு
மேலும் இவர் கடந்த 2009ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி தலைமையில் இருந்து அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சராக பதவியாற்றினார்.
அதுமட்டுமின்றி 2009-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்று சொன்னால் மிகையாகாது.
Read Also : கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!
மேலும் இவர் 2016 முதல் 2022 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி பதவியிலும் வகித்து வந்தார். மேலும் தர்மபுரி ஸ்ரீனிவாஸ்க்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் நிஜாமாபாத் எம்.பி.யாக உள்ளார். மூத்த மகன் சஞ்சய், நிஜாமாபாத் மேயராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனை தொடர்ந்து இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ள நிலையில், இன்று தெலங்கானாவில் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரின் மரண செய்தியை கேட்ட காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் பல்வேறு கட்சியினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க BASSSS
அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம்
மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது ?
மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா
congress party – congress ex leader -dharmapuri srinivas – death news – heart attack news – state of india Telangana – political news in tamil