State Education Policy: தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசால் ஏற்க முடியாது என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு
குறிப்பாக தமிழகத்தில் வரலாற்று மரபு, நிலைமை மற்றும் எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மாநிலக் கல்விக் கொள்கைக்காக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து அடுத்த ஒரு வருடத்திற்குள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. மேலும் இந்த குழுக்கு தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டார். எனவே அவரது தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் சுமார் 600 பக்கங்கள் கொண்ட பரிந்துரைகளை மாநில கல்வி கொள்கை உருவாக்க குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.
Also Read: Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு – வெளியான புதிய விலை பட்டியல் – எங்கெல்லாம் தெரியுமா?
அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் சில…
- தமிழகத்தில் 3ம், 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
- 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.
- பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கூடாது.