
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தான் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு – முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
அதுமட்டுமின்றி நாளை முதல் ஜூலை 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு
ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்