Home » சினிமா » ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் – மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர்  – ஷாக்கான ரசிகர்கள்!

ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் – மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர்  – ஷாக்கான ரசிகர்கள்!

ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் - மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர்  - ஷாக்கான ரசிகர்கள்!

Breaking News ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம்: பாலிவுட்டில் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் தான் அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

தற்போது இயக்கத்தையும் தாண்டி சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். தமிழில் “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

அப்படத்தில் ஆக்டிங்கில் பின்னி பெடலெடுத்த அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒன்றில் பேட்டி அவர் பேசிய ஒரு விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதாவது அதில் அவர் பேசியதாவது, ” நான் ஜெயிலில் இருந்திருக்கிறேன். ஏனென்றால் ஒருவரை நான் அடித்து விட்டேன். அவர் என் மீது புகார் கொடுத்த பேரில் நான் ஜெயிலுக்கு சென்றேன்.

நான் தவறான ஆள் மேலே கையை வெச்சிட்டேன் என்று அப்போது தான் உணர்ந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று ஏது நடந்தது என்று தெரியவில்லை. ஒரு நாள் இரவு முழுக்க ஜெயிலில் இருந்தேன்.

Also Read: நாட்டிய பேரொளி பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா? – இப்போது என்ன செய்கிறார்  தெரியுமா?

யாரை அடித்து நான் ஜெயிலுக்கு போனேனோ அவரே என்னை வெளியே எடுத்தார். அதன்பின்னர் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அதற்கு காரணம் அவர் தான் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அட இப்படியும் நடந்திருக்கா; என்ன நடந்திருக்கும் யாரை அனுராக் அடித்திருப்பார் என்று கேள்வி மேல் கேள்வி சோசியல் மீடியாவில்  கேட்டு வருகின்றனர்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top