Breaking news: சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அடிக்கிற வெயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் முதல் பல ரக வாகனங்களும் எதிர்பாராத நேரத்தில் தீ பிடிக்க தொடங்கி விடுகிறது.
சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் தான் அதிகமான வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்று கூறலாம்.
மழை பெய்தாலும் சரி வெயில் அடித்தாலும் சரி சென்னையில் வாழும் மக்கள் பரபரப்பாக தான் இருந்து வருகிறார்கள்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்நிலையில் சென்னையில் ஒரு அரசு பேருந்து தீப்பற்றி எறிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, சென்னையின் முக்கிய பகுதியான பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் செல்ல அடையாறு பணிமனை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் அப்போது பயணிகள் எதிர்பாராத சமயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Also Read: உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு – கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்
அப்போது பேருந்தில் கிட்டத்தட்ட 30 முதல் 40 பயணிகள் வரை இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட உடன் பயணிகள் பேருந்தில் இறங்கி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இதை கிளிக் செய்து படிச்சு பாருங்க
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு
ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்
tamilnadu news – chennai news – fire accident news – government bus