Breaking News: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் அதிகமாக குழந்தைகள், பெண்கள் இருப்பதால் நாடு முழுவதும் உலுக்கி கொண்டிருக்கிறது.
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம்
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விடாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதன் படி, ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும் மற்றும் கூட்ட நெரிசலின் போது காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Also Read: உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு – கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!
மேலும் அங்கு சிக்கி இருப்பவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதை கிளிக் செய்து படிச்சு பாருங்க
உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு
உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு
சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான்
சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து