நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - தவெக தலைவர் விஜய் கண்டனம்!!நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - தவெக தலைவர் விஜய் கண்டனம்!!

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: தளபதி விஜய் தற்போது நடிப்பையும் தாண்டி அரசியலில் அதிகம்,ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய விஜய், வருகிற 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அவருடைய டார்கெட் என்று கூறி கட்சியின் கொள்கையின் நெறிமுறைகளை முன் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கட்சியை ஆரம்பித்த பிறகு கட்சி சார்பாக நடந்த முதல் நிகழ்வான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழாவை நடத்தி வருகிறார்.

அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள 50 சதவீதம் மாவட்டங்களில் படித்த மாணவர்களை கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மீதமுள்ள 50 சதவீதம் மாவட்டங்களில் படித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய் பேசியதாவது, ” தற்போது தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாக இருக்கும் நீட் தேர்வு இருந்து வருகிறது.

Also Read: நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

இதை பற்றி பேசவேண்டம் என்று தான் இருந்தேன். ஆனால் இதை பற்றி கண்டிப்பாக பேசி தான் ஆகவேண்டும் என்று ஒரு முடிவோடு தான் நான் வந்துள்ளேன். நீட் தேர்வால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே உடனே அரசு இதை ரத்து செய்ய வேண்டும் என்று தலைவர் விஜய் கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தவெக தலைவர் விஜய் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *