LLB Law Degree 2024: LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரியில் சேருவதற்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அதில் ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்ததாக கூறப்படுகிறது. அதன்படி பெரும்பாலான மாணவர்கள் அம்பேத்கர் வழியில் செல்ல நினைக்கின்றனர். அதனால் அவர் படித்த LLB சட்ட படிப்பை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சட்ட கல்லூரியில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதாவது தமிழகத்தில் இருக்கும் சட்ட கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வருகிற ஜூலை 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!!
அதுமட்டுமின்றி மாணவர்கள் 3 years LLB படிப்பிற்கு www.tndalu.ac.in என்ற சமூக வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.