ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு - சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு - சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு மேலும் ஆன்மிக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் என்ற பகுதியில் நேற்று போலே பாபாவின் தலைமையிலான ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் போலே பாபாவின் பேச்சைக் கேட்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து இதற்காக கூட்டம் கூட்டமாக வந்திருந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி கூட்ட நெரிசலில் சிக்கினர்.

இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். மேலும் இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஹத்ராஸ் ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆன்மிக நிகழ்ச்சி தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 18 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!!

இதனையடுத்து கூட்ட நெரிசல் பலி தொடர்பாக ஆன்மிக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான சாமியார் போலே பாபாவை போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *