'இந்தியன் 2' படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’ - பிரம்மாண்ட இயக்குனருடன் மோதும் பார்த்திபன்!!'இந்தியன் 2' படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’ - பிரம்மாண்ட இயக்குனருடன் மோதும் பார்த்திபன்!!

கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு இயக்குனர் என்றால் அது பார்த்திபன் தான். அந்த வகையில் இவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இரவின் நிழல் திரைப்படம் இந்திய சினிமாவின் முதல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட  திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இதனை தொடர்ந்து பார்த்திபன் தற்போது டீன்ஸ் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் அவரே தயாரித்த இப்படத்திற்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி டி. இமான் இசையமைத்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இப்பொழுது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also read: நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்தி வேல் கைப்பற்றியுள்ள நிலையில், வருகிற ஜூலை 12ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அதே நாளில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரம்மாண்ட இயக்குனருடன் பார்த்திபன் மோத இருப்பதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *