புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம்.
சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
புதிய குற்றவியல் சட்டங்கள் :
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற மூன்று சட்டங்களை பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா(BNSS), பாரதீய நியாய சன்ஹிதா (BNS), பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என இந்தியில் பெயர்மாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவற்றில் பல்வேறு சட்டதிருத்தங்களை செய்து மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த சட்ட திருத்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது, இருப்பினும் கடந்த ஆண்டு மாற்றம் செய்த இந்த மூன்று சட்டங்களையும் ஜூலை 1 ஆம் தேதிமுதல் அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு :
அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சார்பில் திருத்தும் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டி இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள் :
ஹத்ராஸ் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு
புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவை எப்போது தொடக்கம்?
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
காதலன் பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மருத்துவ காதலி