KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு - நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு - நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!

Breaking news KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு: தற்போது உச்சத்தில் இருந்து வரும் ட்விட்டர் செயலிக்கு சவால் விடும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட செயலி தான் “கூ செயலி”. கடந்த 2020ம் ஆண்டு போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது.

மேலும் இந்த செயலியை அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா என்ற 2 இந்தியர்கள் தான் உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் Download செய்த நிலையில், தமிழ் மட்டுமின்றி  இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமானது.

மேலும் ட்விட்டர் நிறுவனம் போல கணக்கை தொடங்க கூ செயலி, அதிக தகவல்களை கேட்பதில்லை. வெறும் போன் நம்பர் மட்டும் இருந்தால் போதும்,  கடவுச்சொல் செல்பேசிக்கு குறுந்தகவலாக வரும். அதை தட்டச்சு செய்தால் போதும், கூ செயலியில் கணக்கை தொடங்கி இடுகைகளை பதிவிட ஆரம்பிக்கலாம்.

Also Read: HDFC வாடிக்கையாளர் உஷார் – 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் வங்கி சேவை!

இந்த செயலியை பல்வேறு அரசியல் கட்சியினர் கணக்கை ஓபன் செய்துள்ளனர். இப்படி இருக்கையில் KOO செயலி நிறுவனம் ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, X வலைதளத்திற்கு போட்டியாக தொடங்கப்பட்ட KOO செயலிக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் இருந்து வந்ததால், முழுவதுமாக மூட நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *