கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  - சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  - சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது என்று சொல்லலாம். இதில் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த சாராயத்தில் அதிகமாக மெத்தனால் கலந்திருப்பதை காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து அதிரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ டேக் ஓவர் செய்தது. மேலும் குற்றவாளிகளை விசாரணை செய்த நிலையில், தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு – நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!

அதாவது, கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதி சாராய வியாபாரிகள் விற்றது கள்ளசாராயமே கிடையாதாம். அதற்கு  பதில் வெறும் தண்ணீரில் தான் மெத்தனாலை கலந்து கொடுத்தது தெரிய வந்துள்ளது. எனவே சாராயத்திற்கு பதில் தண்ணீரை யார் கலந்தவர்கள் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, என்பது குறித்து தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *