Kollywood Cinema தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கேப்டன் மில்லர்: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். நடப்பாண்டில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்றது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படங்களில் கேப்டன் மில்லரும் ஒன்று. இந்நிலையில் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. அதாவது கேப்டன் மில்லர் திரைப்படம் 10th annual national film awards-ல் Best Foreign Language Film 2024 எனும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது.
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கேப்டன் மில்லர்
அந்த படத்துடன் இணைந்து Bhakshak படம் மற்றும் Sixty Minutes (Germany), You Are Not Alone: Fighting the Wolf Pack (Spain), The Parades (Japan), The Heartbreak Agency (Germany), Red Ollero: Mabuhay is a Lie (Philippines) ஆகிய படங்களும் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது.
Also Read: அஜித்துக்கு வந்த புதிய தலைவலி – விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் மாற்றம் வருமா? – 70 கோடி நஷ்டம் வர வாய்ப்பு?
அதில் எல்லா படங்களையும் பின்னுக்கு தள்ளி “கேப்டன் மில்லர்” Best Foreign Language Film 2024 என்ற விருதை கைப்பற்றியுள்ளது.
இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமிதம் என்று திரையுலகினர் கூறி வருகின்றனர். மேலும் படக்குழுவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அஜித்தின் “Good Bad Ugly” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
‘இந்தியன் 2’ படத்திற்கு எதிராக களமிறங்கும் ‘டீன்ஸ்’