இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பையை 17 வருடங்களுக்கு பிறகு வென்று சாதனை புரிந்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் இந்திய அணி இன்று தான் தாயகம் திரும்பிய நிலையில், ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்தனர். அதுமட்டுமின்றி காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024
மேலும் மோடிக்கு அவர் பெயர் கொண்ட ஜெர்சியை பரிசாக இந்திய அணி நிர்வாகம் பரிசளித்தது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதுமட்டுமின்றி வான்கடே என்ற மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத் தொகை வழங்க இருக்கிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வாரியம் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வான்கடே ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் பாராட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள இலவச அனுமதி வழங்க இருக்கிறது.
Also Read: T20 world cup Final 2024: இந்தியா VS சவுத் ஆப்பிரிக்கா இன்று பலபரிச்சை! உலக கோப்பை மகுடம் யாருக்கு?
எனவே இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் அலை கடல் என திரண்டுள்ளனர். இதே போல் கடந்த 2007-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இது மாதிரி கோப்பையுடன் வீரர்கள் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் செய்திகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்
Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி
2024 T20 உலக கோப்பை பிராண்ட் தூதராக தடகள வீரர்