அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்த கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் தான் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாள் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
இதனால் சில மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804 லிருந்து, ரூ.16,796 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Also Read: சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !
அதே போல் ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ.10,656 லிருந்து ரூ.16.585 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊதிய உயர்வு வருகிற ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஊதியம் உயர்த்தப்படுமா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.