தமிழகத்தில் என்னது பலூனுக்குள்ள தியேட்டரா: தற்போதைய மக்களுக்கு நாளை கழிக்க முதலில் தேர்ந்தெடுக்கும் இடம் என்றால் அது திரையரங்கம் தான். அங்கு இருக்கும் 2 மணி நேரம் தான் தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்று கூறும் கூட்டம் இப்பொழுது வரை இருக்கிறது.
தியேட்டர்ல பாக்குற ஒரு enjoyment வீட்ல பாக்குற டிவில வருமா சொல்லுங்க. அதனால் தான் நிறைய பேர் weekend எப்படா வரும் படத்துக்கு போலாம்னு ஏங்கிட்டு இருப்பாங்க.
ஆனா தற்போது தியேட்டர் விலையை திரையரங்க உரிமையாளர் சங்கம் அதிகரித்த நிலையில், பெரும்பாலான மக்கள் தியேட்டர் போவதையே நிறுத்தி விட்டனர்.
இன்னும் சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர் படம் வெளியானால் மட்டுமே தியேட்டருக்கு செல்கின்றனர்.
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா
மேலும் Imax, 3D, PXL screen என பல வகை வந்துவிட்ட நிலையில், இப்பொழுது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பலூனுக்குள் ஒரு தியேட்டரை கட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தர்மபுரி மாவட்டத்தின் பொம்மிடி கிராமத்தில் Balloon Modern Cinema Theatre நிறுவப்பட்டுள்ளது. இதை அக்குபஞ்சர் மருத்துவரான ரமேஷ் என்பவர் தான் உருவாக்கியுள்ளார்.
Also Read: உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு – அரசுக்கு ரூ.822 கோடி ரூபாய் குத்தகை பணம் பாக்கி!!
மேலும் இதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த Picture Time என்ற நிறுவனத்துடன் இணைந்து 50 சென்ட் நிலத்தில் இதை அமைத்துள்ளார் ரமேஷ்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த திரையரங்கம் கன்டெய்னர் மற்றும் பெரிய ராட்சத பலூன் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தியேட்டரில் 140 இருக்கைகள் மட்டுமே இருக்கிறது.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024-
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு
சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024