புதிய கேபினட் கமிட்டி 2024 ! முக்கிய விவகாரங்களில் சரியான முடிவுகளை எடுக்க அமைத்தது மத்திய அரசு !புதிய கேபினட் கமிட்டி 2024 ! முக்கிய விவகாரங்களில் சரியான முடிவுகளை எடுக்க அமைத்தது மத்திய அரசு !

ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சில விவகாரங்களில் தலையிடும் போது புதிய கேபினட் கமிட்டி 2024 முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதற்காக பிரதமர் கேபினட் கமிட்டிகளை அமைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரதமரின் 3 வது ஆட்சியில் நேற்றைய முந்தய தினம் புதிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள். கேபினட் கமிட்டிகளில் இந்த குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் முப்படை தளபதிகள் நியமனம், மத்திய அரசின் முக்கிய பதவிகள், ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் போன்ற முக்கிய பதவிகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த கமிட்டியில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சட்டம், ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முடிவுகள் இந்த கமிட்டியால் எடுக்கப்படும்.

இந்த கமிட்டியில் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், நிதி அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோருடன் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, விவசாய துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கனரக தொழில்கள் துறை மந்திரி குமாரசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர வர்த்தக மந்திரி, கல்வி மந்திரி, பஞ்சாயத் ராஜ் மற்றும் மீன்வளத்துறை மந்திரி ஆகியோரும் இந்த குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.07.2024) ! மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பவர் கட் !

இந்த கமிட்டியின் உறுப்பினர்களாக உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், நிதி அமைச்சர், பஞ்சாயத் ராஜ் மந்திரி ஆகியோருடன் சுகாதார துறை மந்திரி, சமூக நீதி துறை மந்திரி, சிவில் விமான போக்குவரத்து துறை, பழங்குடியினர் விவகார துறை, நாடாளுமன்ற விவகார துறை மந்திரி, ஜல் சக்தி துறை மந்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த குழுவில் சிறப்பு உறுப்பினர்களாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர்களான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல்.முருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் கூட்ட தொடர், அரசின் சட்ட முன் வரைவு மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து இதில் முடிவு எடுக்கப்படும்.

மேலும் 4 கேபினட் குழுக்கள்:

மேற்கண்டவை தவிர இடவசதி கேபினட் கமிட்டி, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி, அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி போன்ற 4 கமிட்டிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.

இன்றைய முக்கிய செய்திகள்

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

“நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *