தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு :
கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற்றது.
அவ்வாறு நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்ததன.
மேலும் நீட் வினாத்தாள் கசிய விடப்பட்டதாகவும், கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு எழுதிய குறிப்பிட்ட மாணவர்களுக்கு அதிகளவு மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனை தொடர்ந்து நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மேலும் இந்த விகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு இதற்க்கு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நீட் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு – தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் :
இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத காரியம், மேலும் அது நியாமாகவும் இருக்காது.
அத்துடன் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் அதனை ரத்து செய்வதும், மறு தேர்வு நடத்துவதும் தேவையற்றது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார்
நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா