Breaking News திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை: பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையானை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 24 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஏதேனும் விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதற்காக பெரும்பாலான மக்கள் விஐபி தரிசனம் செய்ய நினைக்கிறார்கள்.
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
அதுமட்டுமின்றி விஐபி தரிசனத்திற்கு முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இந்நிலையில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி வருகிற ஜூலை 9ம் தேதி மற்றும் ஜூலை 16-ந் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் கோயிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு ஆரம்பிக்கப்படும். எனவே ஆனி வார ஆஸ்தானம் 16-ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன் ஜூலை 9ஆம் தேதி கோவில் முழுவதும் காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Also Read: ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்து சமய அறநிலையத்துறை !
இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி அந்த 5 மணி நேரமும் எந்த பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் 9 மற்றும் 16ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆன்மிக செய்திகளை படிக்க இத கிளிக் செய்யுங்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024
சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில்