ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை - அட இவங்கள - இதை யாருமே எதிர்பார்க்கலயே!ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை - அட இவங்கள - இதை யாருமே எதிர்பார்க்கலயே!

Kollywood King ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தார்.

Join WhatsApp Group

ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்று சொல்லலாம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பிகில் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் விஜய்யின் பிகில் படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார்.

Also Read: ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன் – இந்த படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

ஏற்கனவே சுருதிஹாசன் படத்தில் கமிட்டாகியுள்ள நிலையில்,  ரெபா மோனிகாவும் கலந்து கொண்டுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரஜினி மகள்களாக ஸ்ருதிஹாசன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *