
Breaking News மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம்: சமீபத்தில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அதை ரத்து செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திமுக சட்டத் துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தலைமையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மூன்று குற்றவியல் சட்டங்களை புறக்கணிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?