ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.

அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.

இதனால் பாதுகாப்பு கருதி அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்து வெட்டியதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா, திருமலை, செல்வராஜ், ராமு, அருள் உள்ளிட்ட 8 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் வைத்து ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக ஆற்காடு சுரேஷின் சகோதரர் தனது கூட்டாளிகளோடு இந்தக் கொலையை செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அந்த வாக்குமூலத்தில் தனது அண்ணனைக் கொலை செய்ததது மட்டுமல்லாமல், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டி வந்தததால்,

இதன் காரணமாக தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் அன்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகக் கூறினர்.

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி செலுத்தினார்.

இந்த கொலை சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன்,

தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் அனைவரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அத்துடன் உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

அந்த வகையில் 8 பேர் சரணடைந்துவிட்டதால் காவல்துறை புலன் விசாரணையை முடித்துவிடக் கூடாது என்றும், ஆம்ஸ்ட்ராங் போன்றவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.

மேலும் கூலிப் படைக்கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *