Breaking News: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்
அதன்படி அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் – என்ன காரணம் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்!
மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?
உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு