நமது அன்றாட வாழ்வில் அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதையும், அது எவ்வாறு மனித உடலுக்கு நன்மை அளிக்கிறது என்பது குறித்தும் காணப்போம்.
அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அரைக்கீரை :
நாம் உட்கொள்ளும் உணவுகளில் அதிகளவு காய்கறிகள் மற்றும் சத்துள்ள பொருட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தி கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
இவற்றுள் முக்கிய பங்கு வகிப்பது கீரை வகைகள் தான், அந்த வகையில் அரைக்கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி காணப்போம்.
அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
அரைக்கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இது இரும்பு, கால்சியம், வைட்டமின் A, C, K, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் அரைக்கீரையில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது.
அத்துடன் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
அரைக்கீரையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் K போன்ற சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு உதவுவதுடன், எலும்புப்புற நோய்களைத் தடுக்க வழிவகை செய்கிறது.
குறிப்பாக அரைக்கீரையில் உள்ள வைட்டமின் A கண் பார்வைக்கு அவசியம். மேலும் இது கண்புரை மற்றும் மஞ்சள் நிற புள்ளி போன்ற வயது மூப்பு தொடர்பான கண் நோய்களைத் தடுக்க பயன்படுகிறது.
இதனையடுத்து அரைக்கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. அதன் பின்னர் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
பாகற்காய் ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? என்னென்ன தெரியுமா?
அரைக்கீரையில் உள்ள வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், சுருக்கங்கள் மற்றும் மென்மையான கோடுகளை குறைக்க உதவுகிறது. குறிப்பாக இரும்புச்சத்து முடி வளர்ச்சிக்கு அவசியம். மேலும் இது முடி உதிர்தலைத் தடுக்க உதவுகிறது.