இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில் அமைந்துள்ள பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில் கிட்டத்தட்ட உள்ளூர் கிராமத்தை சேர்ந்த 33 பேர் இறங்கி தங்கம் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு
அதே போல் நேற்று (ஜூலை 7) அந்த சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில் இறங்கி தங்கத்தை தேடி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மேல் பகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து காற்றுகூட போகாத அளவுக்கு அடைத்தது. திடீரென நடந்த இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
Also Read: தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024) ! மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
இதனை தொடர்ந்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்த பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலச்சரிவில் காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்
மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம்