தற்போது கேரளாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மூளை உண்ணும் அமீபா வைரஸ் :
தற்போது கேரளாவில் பரவி வரும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மனித மூளை வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தற்போது வழிகாட்டுதல் நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல் நடைமுறை :
தமிழ்நாடு அரசு வெளியீட்டுள்ள அறிவிப்பில் தேங்கி கிடக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்த்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நீர்நிலைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனை தொடர்ந்து அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் தற்போது கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அமீபா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவிற்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!
முன்னெச்சரிக்கை நடவடிக்கை :
அத்துடன் கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகளின் எதிரொலியாக,
அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால்,
மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுட்டறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.