நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

Breaking news: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்1 தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில் அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்ததாக கூறி தேர்வு எழுதிய மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

அதுமட்டுமின்றி நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி நடப்பாண்டில் நடந்த வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் வாங்கியது இது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், நடப்பாண்டு நடந்த நீட் தேர்வு வினாத்தாள் மொபைல் மூலம் கசிந்து பள்ளிகளில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள் வெளியிடப்பட்டதாக  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இதனை தொடர்ந்து நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு  மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

இது தொடர்பாக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. Supreme Court – Neet Exam 2024 – indian news – tamilnadu news – National Examinations Agency – NEA news –

  1. Neet Exam 2024 latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *