ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர்: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள வடுகச்சிமாத்தில் என்ற பகுதியில் வகித்து வருபவர் தான் பி.ராமையா(41). இவர் கடந்த 2006ம் ஆண்டு தோனாவூரிலுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரூ. 2,959 பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர்
இது அப்போது பெரிய பிரச்சனையாக கிளம்பிய நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. ஆனால் அதற்குள் ராமையா தலைமறைவாகினார். தற்போது 16 வருடங்களுக்கு பிறகு ராமையா சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சமீபத்தில் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த ராமையாவின் உறவினர்கள் சிலர் அங்கே சாமியார் வேடத்தில் ராமையாவை பார்த்ததாக திருநெல்வேலியில் கூறி இருந்தனர். இதனை தொடர்ந்து 16 வருடங்களுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கை தூசித்தட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!
இதையடுத்து காவி உடையில் மௌன சாமியாராக ஆசி வழங்கிக் கொண்டிருந்த ராமையாவை கையும் களவுமாக போலீஸ் பிடித்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணைக்காக நான்குநேரிக்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து ஏர்வாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்
தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம்
திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்