பாலாவின் "வணங்கான்" பட டிரைலர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!பாலாவின் "வணங்கான்" பட டிரைலர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

பாலாவின் “வணங்கான்” பட டிரைலர் ரிலீஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் பாலா. தற்போது இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘வணங்கான்’. மேலும் இப்படத்தில்  சூர்யா நடிக்க இருந்த நிலையில் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

இதனை தொடர்ந்து தான் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் ஹீரோயினாக  ரோஷினி பிரகாஷ் நடிக்க,இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read: பிரபல நடிகர் கூட்டணியில் “DD ரிட்டர்ன்ஸ் பார்ட் 2” – அப்படி போடு – செம கலக்கு கலக்கும் சந்தானம்!!

ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தற்போது படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பாலாவின் “வணங்கான்” பட டிரைலர் ரிலீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *