மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி - 31 பேர் கைது !மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி - 31 பேர் கைது !

தற்போது பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிலாகியுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தற்போது 31 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் அரசுத் துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில், பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் பல தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை கைது செய்துள்ளார்.

தேர்வர்களின் பயோமெட்ரிக் கைரேகையானது தேர்வு மையங்களில் ஸ்கேன் செய்யப்பட்டபோது, உண்மையான தேர்வர்களுக்குப் பதிலாக போலியான நபர்கள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததாக 5 பெண்கள் உள்பட 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தர்பங்கா எஸ்எஸ்பி ஜகுநாத் ரெட்டி தெரிவிக்கையில், மேலும் லஹேரியாசராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெவ்வேறு மையங்களில் இருந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத பிடிபட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றும் நடத்தப்பட்ட விசாரணையில்,

ஒவ்வொரு மாணவர்களிடமும் 25000 முதல் 50000 வரை பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!

இதனை தொடர்ந்து முன்னதாக இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சிடிஇடி தேர்விலும் ஆள் மாறாட்ட முறைகேடு செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *