பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Breaking News: பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம்: இந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் உஷா உதுப். இவர் பாடிய பல பாடல்கள் இப்பொழுது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்களில் இருந்து வருகிறது. 1960 ல் தொடங்கிய அவருடைய இசை பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் பல விருதுகளையும் வாரி குவித்து இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட பத்மபூஷன் விருது வாங்கினார். இதற்கிடையில் அவர் ஜானி சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அவருடைய வீட்டில் ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது பாடகி உஷா உதுப் கணவரான ஜானி (வயது 78) கொல்கத்தாவில் உள்ள அவர் வீட்டில் நேற்று டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்த அவர் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Also Read: பாலாவின் “வணங்கான்” பட டிரைலர் ரிலீஸ் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. மேலும் ஜானி சாக்கோ, உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *