Home » சினிமா » புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா – சினிமாவில் இருந்து அந்த பக்கம் தாவி அசத்தல்!!

புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா – சினிமாவில் இருந்து அந்த பக்கம் தாவி அசத்தல்!!

புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா - சினிமாவில் இருந்து அந்த பக்கம் தாவி அசத்தல்!!

சினிமாவில் புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் திரிஷா. இவர் கடைசியாக விஜய்யுடன்1 சேர்ந்து லியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜித்துடன்2 விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் மற்றும் விஜய்யுடன் கோட் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் அதிக மார்க்கெட்டுகளை வைத்துள்ள த்ரிஷா தற்போது முதன் முதலாக வெப் சீரிஸில் காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி அவர் தற்போது பிருந்தா எனும் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் இணைந்து இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ஆமானி, ரவீந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் சூர்யா வங்களா இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி சோனி (Sony) ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Alsp Read: சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ் – இரண்டு பார்ட்டாக வெளியாகும் “கங்குவா” திரைப்படம்!!

அதுமட்டுமின்றி இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கிடைத்த வரவேற்பு ஓடிடியில் கிடைக்கிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

  1. actor vijay latest news ↩︎
  2. actor ajithkumar latest news ↩︎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top