தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட தற்போது மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் :
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசின் இந்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சகம் கலைஞர் நினைவு நாணயத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இது குறித்த முழுமையான அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவராக இருந்த ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விரும்பியது.
இதன் அடிப்படையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்நாணயத்தை கடந்த ஜுன் 3 ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கலைஞர் நினைவு நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது வந்தது.
தற்போது நேற்று நினைவு நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பம் இட்டதாகத் தெரிகிறது.
இதற்கு முன்னர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாணய மாதிரி வரைபடம் :
விண்ணப்பிப்பவர்களிடம் நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் பெறப்படுகிறது. இதனை வடிவமைக்கும் பணியை மத்திய நிதியமைச்சகம் செய்கிறது.
அந்த வகையில் கருணாநிதியின் நாணயத்தின் மாதிரி வரைபடம் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இதனை மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது.
ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் – அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !
இதனையடுத்து மு.கருணாநிதி உட்பட மூன்று நாணயங்கள் குறித்த உத்தரவை மத்திய அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த நினைவு நாணயத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகமும் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.