சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல் வெளியீடு - 4ம் இடத்தை பிடித்த இந்திய வீரர்!சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல் வெளியீடு - 4ம் இடத்தை பிடித்த இந்திய வீரர்!

Breaking News: சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல் வெளியீடு: தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் மீண்டும் ஸ்பெயின் அணி தான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்  குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிட்டத்தட்ட 212 போட்டிகள் விளையாடி சுமார் 130 கோல்கள் அடித்து, சர்வதேச கால்பந்தில் ஆண்கள் விளையாட்டில் அதிக கோல்களை அடித்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அவரை தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி 148 போட்டிகளில் 109 கோல்கள் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் அலி தேய் 186 போட்டிகளில் 108 கோல்கள் அடித்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: 2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் – 22 ஆண்டுகளுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு!!

அவரை தொடர்ந்து இந்திய கால்பந்து வீரரான சுனில் சேத்ரி 155 போட்டிகளில் 94 கோல்கள் அடித்து நான்காம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியல் பின்வருமாறு, 

பதவிஆட்டக்காரர்நாடுகோல்கள் போட்டிகள்
1கிறிஸ்டியானோ ரொனால்டோபோர்ச்சுகல் 130 212
2லியோனல் மெஸ்ஸிஅர்ஜென்டினா109148
3அலி டேய் ஈரான்108186
4சுனில் சேத்ரி இந்தியா 94155
5மொக்தார் தஹாரி மலேசியா89 142
6அலி மப்கவுத் ஐக்கிய அரபு நாடுகள்85 114
7ரொமேலு லுகாகு பெல்ஜியம் 85 119
8ஃபெரென்க் புஸ்காஸ் ஹங்கேரி 84 85
9ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி போலந்து83 152
10காட்ஃப்ரே சிட்டாலு ஜாம்பியா79 111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *