மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளி நேரத்தில் மாற்றம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பள்ளி நேரத்தில் மாற்றம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம்: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசு பள்ளிகள் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரியில் இருக்கும் எல்லா அரசு பள்ளிகளும் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் இப்பொழுது அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, காலை 8.45 மணிக்கு தொடங்கும் பள்ளிகள் இனிமேல்  காலை 9 மணிக்கு தொடங்கும். அதே போல் மாலை 4 மணிக்கு நிறைவு பெறும் பள்ளிகள், மாலை 4:20 மணிக்கு முடியும்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்த முதல் 15 நிமிடத்தில்  அசெம்பிளி நடைபெறும். இதையடுத்து முதல் பாடவேளை  காலை 9.15க்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவு பெறும்.

இரண்டாம் பாட வேளை ( 10AM  – 10.45 AM), 10 நிமிட இடைவேளை, மூன்றாம் பாடவேளை ( 10.55AM  – 11.40 AM), 4ம் பாடவேளை ( 11.40AM  – 12.25 PM) நடைபெறும்.

Also Read: சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல் வெளியீடு – 4ம் இடத்தை பிடித்த இந்திய வீரர்!

அதன்பிறகு,  12.25 முதல் 1.30 வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. இதையடுத்து மதியம் 1:30 முதல் 2.10 வரை 5வது பாடம், அப்புறம் 2.10 முதல் 2.50 வரை 6வது பாடம் நடத்தப்படும். 2.50 PM முதல் 3 PM வரை Break,  மதியம் 3 மணி முதல் 3.40 PM வரை 7வது பாடம், 3.40 PM முதல் 4.20 PM  வரை 8வது பாடம் என விடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *