Home » செய்திகள் » விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் கனிமொழிக்கு கத்திக்குத்து – என்ன நடந்தது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் கனிமொழிக்கு கத்திக்குத்து – என்ன நடந்தது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் கனிமொழிக்கு கத்திக்குத்து - என்ன நடந்தது?

Breaking News: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் கனிமொழிக்கு கத்திக்குத்து: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தற்போது வரை விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டி. கொசபாளையம் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

அதாவது டி. கொசபாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக கனிமொழி என்ற பெண் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய முன்னாள் கணவரான ஏழுமலை என்பவர்  அவரின் கழுத்தில் கத்தியை வைத்து கீறி அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரை மறைக்கப்பட்டு கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தில் மாற்றம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து காயமடைந்த கனிமொழி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்படி வாக்குப்பதிவு மையத்தில் ஒரு பெண்ணை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top