விக்ரமின் "தங்கலான்" ட்ரைலர் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!விக்ரமின் "தங்கலான்" ட்ரைலர் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விக்ரமின் “தங்கலான்” ட்ரைலர் வெளியீடு: திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர் தான் சியான் விக்ரம்1. தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து  மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன், ஹரி கிருஷ்ணன் அன்புதுரை, வேட்டை முத்துக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் தங்க சுரங்கத்தில் நடைபெறும் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் விக்ரம் நடித்துள்ள “தங்கலான்” படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Also Read: புதிய யுக்தியை கையில் எடுத்த திரிஷா – சினிமாவில் இருந்து அந்த பக்கம் தாவி அசத்தல்!!

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அதிரடி வசனங்களுடன் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்துள்ள இப்படத்தை காண ரசிகர்கள் இப்போது இருந்தே ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

  1. actor vikram latest news update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *