Breaking News: தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் சிறு மாற்றம்: தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வாழும் மக்கள் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு குறித்து மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் சிறு மாற்றம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு நற்செய்தி. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை.
அதன்படி 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் கட்டப்பட்ட வீட்டுக்கு ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை. அதே போல் 14 மீட்டர் உயரம் இல்லாமல் இருக்கும் எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தேவை இல்லை.
Also Read: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !
அதுமட்டுமின்றி 14 மீட்டர் உயரம் இல்லாமல் வெறும் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவுக்குள் கட்டப்பட்ட வணிக கட்டிடங்களுக்கும் தேவை இல்லை. இறுதியாக அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை. எனவே மின் இணைப்பு பெறுவதற்கான இன்றே விண்ணப்பியுங்கள்!!
அப்படி போடு.., கலைஞர் ஐயாவுக்கு பெருமை சேர்த்த நாணயம்?
அடக்கடவுளே.., காலையிலேயே இப்படி ஒரு சோகமா?
மக்களே ரெடியாகிக்கோங்க.., இந்த பகுதியில் நாளை பவர் கட்
ஆன்மிக பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – இந்த கோவிலில் உள்ள செல்ல அனுமதி!!