தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி -  திறமைக்கு வயது தடையில்லை!!தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி -  திறமைக்கு வயது தடையில்லை!!

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி: இப்போது இருக்கும் காலகட்டத்தில் வயதான முதியவர்கள் தங்களது வயதை ஒரு இதுவாக பொருட்படுத்தாமல் பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 82 வயது ஒரு பாட்டி தங்களது பேரன்களுக்கு போட்டியாக பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யு என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கிட்டம்மாள் இவருடைய கணவர் வெங்கட்ராமன், மகள் தேவி  மற்றும் ரித்திக், ரோஹித் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து கிட்டம்மாளின் பேரன்கள் இருவரும் ஏற்கனவே தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து தற்போது மாநில அளவிலான  பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கிடையில் பேரன்களுடன் சேர்ந்து வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று பாட்டி உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

அப்போது பாட்டி விடாமல் பளு தூக்கும் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பாட்டியின் பயிற்சியை பார்த்து வியந்து போன உடற்பயிற்சியாளர் சதீஷ் என்பவர் கடந்த மே மாதம் நடந்த  “இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன்” சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Also Read: நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… 63 பயணிகள் உயிருக்கு ஆபத்தா?

அப்போது உள்ளே நுழைந்த சில வினாடிகளில் கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி இந்திய அளவில் 5ம் இடத்தை பிடித்தார்.

இதனால் அவருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திறமைக்கு வயது தடையில்லை என்பதை கிட்டம்மாள் நிரூபித்து காட்டியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *