Breaking News: தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்வு: திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த சட்டசபையில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கொண்டு வர வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ” அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது. மேலும் அந்த பேருந்துகளில் செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்வு
இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 600க்கும் மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் கிட்டத்தட்ட 7500 பேருந்துகள் புதிதாக வாங்க உத்தரவிட்டுள்ளார்.
இப்படி இருக்கையில் எப்படி அரசு போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடியும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அரசு நிர்வாகம் தெரியாமல் இருக்கிறார்.
Also Read: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் – டெல்லி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு நடப்பாண்டு ரூபாய் 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக மற்ற மாநிலங்களில் டீசல் பெட்ரோல் விலை உயரும் பட்சத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் தற்போது இலவச பேருந்து செயல்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் கூட கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து கழகத்தில் நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி
நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்
புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை