Smile day: இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்: இன்றைய நவீன உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு விஷயங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சில பேருக்கு மாரடைப்பும் ஏற்படுகிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்க சிரிப்பு என்பது ரொம்ப முக்கியம். அப்படி சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்
இதனை தொடர்ந்து ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் சில உண்மைகள் வெளி வந்துள்ளது. அதாவது அந்த ஆராய்ச்சியில் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யமகட்டா மாகாணத்தில் தினதோறும் மக்கள் அனைவரும் ஒரு முறையாவது கண்டிப்பாக சிரிக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதத்தில் வரும் 8 வது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்.
Also Read: மதுரை சிறுவன் கடத்தல் விவகாரம் – ஒருவரை அதிரடியாக கைது செய்த போலீஸ் – என்ன நடந்தது?
அந்த நாளில் கண்டிப்பாக சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் சிரிப்பு என்பது ஒரு தனி மனிதனின் உரிமை என்று கூறப்படுகிறது.
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்வு?
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி
நேபாளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு