Breaking News: அமெரிக்காவில் சிலந்தி கடித்ததால் அழுகிய பெண்ணின் முகம்: உலகில் பல இடங்களில் பல்வேறு நூதனமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர் தான் ஜெசிகா ரோக் அட்லாண்டா. அவருக்கு வயது 44 இருக்கும்.
இந்நிலையில் இந்த பெண்ணின் மேல் திடீரென ஒரு பழுப்பு நிறத்தில் இருந்த சிலந்திகள் விழுந்துள்ளது. அதை அப்போது அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். சிலந்தி விழுந்த அடுத்த 24 மணி நேரத்தில் அந்த பெண்ணின் முகம், கைகள், தொண்டை ஆகிய இடங்களில் தடிப்பு தடிப்பாக வீங்கி உள்ளது.
அமெரிக்காவில் சிலந்தி கடித்ததால் அழுகிய பெண்ணின் முகம்
அதோடு மட்டுமல்லாமல் நேரம் செல்ல செல்ல வீக்கம் அடைந்த இடத்தில் தோல் விரிந்து அழுகிய நிலைக்கு சென்றது. மேலும் அந்த பெண்ணின் கை மற்றும் கால் பகுதிகளில் உணர்வின்மையும், இயக்கம் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read: 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 2024 வெளியீடு – முன்னிலை வகிக்கும் (INDIA) இந்தியா கூட்டணி!!
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிலந்திகள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்த இனம் 0. 5 அடி அங்குலம் நீளம் கொண்ட நிலையில் இது கடித்தால்தோல்களை அழுக வைத்து, புண்களை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது ஆகும். Indian news – america – women – spiders
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்