யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி - ஸ்பெயின் அணி அபார வெற்றி !யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி - ஸ்பெயின் அணி அபார வெற்றி !

பெர்லினில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி யில் 4வது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல். மேலும் சிறந்த வீரர்களுக்கான பட்டத்தையும் தட்டி சென்றனர்.

தற்போது ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனையடுத்து போட்டியின் இரண்டாம் பாதி தொடங்கிய 47வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார்.

இதன் காரணமாக ஸ்பெயின் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஸ்பெயின் அணி எளிதில் வெற்றிபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கோல் பால்மர் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

இதன் காரணமாக கடந்த முறை போல் இந்த முறையும் போட்டி சமனில் முடிந்து பெனால்டி அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வந்த மைக்கேல் ஓயர்சபால் போட்டியின் 86வது நிமிடத்தில் மேலும் ஒருகோல் அடித்ததை தொடர்ந்து ஸ்பெயின் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் – ஒரு பாடல் பாடி 25 கோடி வாங்கிய சிங்கர் – யார் தெரியுமா?

இந்த தொடரில் ஸ்பெயின் அணி மொத்தம் 15 கோல்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக இளம் வீரர்களை கொண்ட அணியாகவும் ஸ்பெயின் தற்போது உருவெடுத்துள்ளது.

அத்துடன் தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 16 வயதான லாமின் யாமல் வென்றார்.

மேலும் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *