Breaking News: சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி: தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் யூரோ 2024 கோப்பை நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நேருக்கு நேர் மோதின. இதில் ஸ்பெயின் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று நடந்த நடப்பாண்டு போட்டியிலும் யூரோ கோப்பையை ஸ்பெயின் அடித்து தூக்கியது.
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
இதனால் கால்பந்து போட்டி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தை பார்க்க சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
அந்த ஹோட்டலில் வைத்து ஏகப்பட்ட இளைஞர்கள் ரசித்து பார்த்து கொண்டிருந்த போது, யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 20 படுகாயமடைந்தனர்.
Also Read: தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்!!
தற்போது காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவம் வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகாமையில் தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்