
World’s most expensive water bottle : ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா: ஒரு மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தான் தண்ணீர். ஆனால் இப்பொழுது தண்ணீர் வியாபாரம் ஆனா நிலையில், ஏழை எளிய மக்கள் இன்னும் ஏழ்மையை சந்தித்து வருகின்றனர். குடிக்கும் நீருக்கு காசு கேட்காதே என்று பலரும் கண்டனம் தெரிவித்த போதிலும் இது குறைந்த பாடில்லை.
ஆனாலும் காசு கொடுத்து வாங்கும் மக்களும் ஒரு பக்கம் இருக்கின்றன. இப்படி இருக்கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை ஒரு லட்சத்திற்கு வியாபாரம் செய்து வருகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க, ஜப்பானில் தயாரிக்கப்படும் ‘பிலிகோ ஜூவல்லரி வாட்டர்’ பாட்டில் தான் ஆயிரத்து 390 டாலருக்கு விற்கப்பட்டு வருகிறது.
ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா
இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். அப்படி இந்த தண்ணீரில் என்ன விசேஷம் இருக்கிறது என்று உங்களுக்கு தோணலாம். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், ” குடிக்கும் நீர் மிகவும் தூய்மையாக இருப்பது மட்டுமின்றி இது இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது.
Also Read: சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி – யூரோ கோப்பை இறுதி போட்டியில் நடந்த கோர சம்பவம்!
இதனால் தண்ணீர் உயர் தரமாக இருக்கும். மேலும் அதன் பாட்டில் ரொம்ப ஆடம்பரமாக அலங்கரித்துள்ளது.
அதாவது, அந்த பாட்டில் விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைத்துள்ளனர்.
எனவே ஆடம்பர வாழ்க்கையை விரும்புவோர் கண்டிப்பாக இந்த தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை