Home » சினிமா » மக்களை தேடி நடைபயணம் செல்லும் தவெக தலைவர் விஜய் – 4 மண்டல மாநாடுகள் எப்போது?

மக்களை தேடி நடைபயணம் செல்லும் தவெக தலைவர் விஜய் – 4 மண்டல மாநாடுகள் எப்போது?

மக்களை தேடி நடைபயணம் செல்லும் தவெக தலைவர் விஜய் - 4 மண்டல மாநாடுகள் எப்போது?

Thalapathy Vijay: மக்களை தேடி நடைபயணம் செல்லும் தவெக தலைவர் விஜய்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தளபதி விஜய்1. தற்போது இவர் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் விஜய் எப்போது கட்சி சின்னம், கொடி போன்றவற்றை அறிவிப்பார் என மக்கள் மத்தியில் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் “தமிழக வெற்றிக் கழகம்” கட்சி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தவெக கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான பணிகளும் தற்போது துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த மாநாடு வரும் செப்டம்பரில் அல்லது நவம்பரில் நடைபெறலாம் என தெரிகிறது. இதனை தொடர்ந்து விஜய் கட்சி சார்பாக நடைபயணம்  மேற்கொள்ள இருக்கிறாராம்.

Also Read: பாக்கியலட்சுமி சீரியல்: ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகாவின் தாயாருக்கு பதிலடி கொடுக்கும் கோபி.. பாக்யாவின் அடுத்த ஆக்சன் என்ன?

அதன்படி  4 மண்டல மாநாடுகள் – தமிழக மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு எனவும் நடைபெறவுள்ளதாம். இதில்  மக்களை நேரடியாக சந்திக்க விஜய் , கிட்டத்தட்ட 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் – ஒரு பாடல் பாடி 25 கோடி வாங்கிய சிங்கர்

  1. thalapathy vijay latest news in tamil ↩︎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top