Breaking News: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Also Read: 5 கதவுகள் கொண்ட Mahindra Thar போட்டோக்கள் கசிவு – எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்!!
மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற ஜூலை 21ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்
உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட்