சுங்கக்கட்டண உயர்வை எதிர்த்து உள்ளூர் மக்களின் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது.
திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கப்பலூர் சுங்கச்சாவடி :
மதுரை மாவட்டம் திருமங்கத்திற்கு அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கடந்த 10 ஆம் தேதி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்ததை கண்டித்து இந்த தர்ணா போராட்டமானது எதிர்க்கட்சியான அதிமுக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பிவிடப்பட்டது.
மேலும் கப்பலூர் பகுதியில் போராட்டம் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை :
இந்நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர்கள் முன் அமர்ந்து பழைய முறையே தொடர வேண்டும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களைக் கலைக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டனர் இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து சுமார் 10 மணி நேரமாக நீடித்து வந்த கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி :
அந்த வகையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வீட்டுல நடந்த விசேஷம் – சிம்பிளாக முடிந்த கொள்ளு பேத்தி திருமண நிச்சயதார்த்தம்!!
மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, திருமங்கலம் நகராட்சி மக்கள் மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
அத்துடன் கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரியும், உள்ளூர் மக்களுக்கு 100 சதவீதம் கட்டண விலக்கு அளிப்பது போன்ற கோரிக்கை விவகாரத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.