Breaking News: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு: தமிழகத்தில் தற்போது வீடு மற்றும் வணிகம் உள்ளிட்ட மின் கட்டணம் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” எப்போதும் போல் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வீட்டு மின் கட்டணம்:
100 To 400 யூனிட் வரை மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.60லிருந்து தற்போது ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல 401 To 500 யூனிட் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.15லிருந்து ரூ.6.45ஆகவும், 501 To 600 யூனிட் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8.15லிருந்து ரூ.8.55ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு
இதனை தொடர்ந்து 601 To 800 யூனிட் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.9.20லிருந்து ரூ.9.65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல், 801 To 1000 யூனிட் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.10.20லிருந்து ரூ.10.70ஆகவும், ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.11.25லிருந்து ரூ.11.80ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Also Read: உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – ZOMATO மற்றும் SWIGGY கொடுத்த அதிர்ச்சி தகவல்!!
வணிகம் மின் கட்டணம்:
50 கி.வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு இதுவரை ரூ.9.70 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.10.15ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிலோ வாட்டுக்கான வாடகையும் ரூ.307 லிருந்து ரூ.322 ஆகவும், 112 கிலோ வாட்டுக்கு மேல் உபயோகப் படுத்துபவர்களுக்கு வாடகை ரூ.562 லிருந்து ரூ.589 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்
உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட்